ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திரையுலகில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்று சொல்வார்கள். உறவினர்களாக இருந்தாலும் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள் நடிகர் தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்.
'3' படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடலால் ஒரே நாளில் உலக அளவில் பிரபமானார் அனிருத். அவருக்கு அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தியதே தனுஷ் தான். ஆனால், அவர்களது நட்பு நீண்ட வருடங்களுக்கு நீடிக்கவில்லை.
மீண்டும் இருவரும் இணைந்துவிடுவார்கள் என திரையுலகினரும், அவர்களது குடும்பத்தினரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது இதுவரை நடக்கவில்லை. நடுவில் ஷான் ரோல்டன் பக்கம் சாய்ந்த தனுஷ், மீண்டும் யுவன் ஷங்கர் ராஜா பக்கம் சாய்ந்துவிட்டார்.
இதனிடையே, ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் புதிய படத்திற்கு அனிருத் இசையமைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அனிருத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இதுவரை அனிருத்திற்கு இது சம்பந்தமாக ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை தனுஷ்.
மாறாக, 'காலா' டீசரை தனுஷ் அவருடைய டுவிட்டரில் பதிவிட்டதை, ரி-டுவீட் செய்து பாராட்டியுள்ளார் அனிருத். அதே போல அனிருத்தை '3' படத்தில் அறிமுகப்படுத்திய தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனுஷ், ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கூட பாராட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.