ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைகழகத்தில் வருகிற 5ந் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. பல்கலைகழகத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் ரஜினிகாந்த், பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் மொரீஷியஸ் நாட்டின் துணை ஜனாதிபதி பரமசிவம் பிள்ளை வையாபுரி, இலங்கை அமைச்சர் வி.எஸ்.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள், எம்.ஜி.ஆருடன் அரசியலில் பயணித்தவர்கள் ஆகியோருக்கு எம்.ஜி.ஆர் விருது கொடுத்து கவுரவிக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டிடமும் திறந்த வைக்கப்படுகிறது.