அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
கரு படத்தின், 'டைட்டில்' பாடல் உட்பட, பல பாடல்களை எழுதி வரும் பாடல் ஆசிரியர், மதன் கார்க்கி, பாடல் ஆசிரியர்களுக்கு கணினி இலக்கணம் வகுத்து வருகிறார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:அப்பாவுக்கு இருப்பது போல், தமிழ் அறிவு எனக்கு இல்லை;
இலக்கண பயிற்சியும் இல்லை. என் பாடலுக்கு துணையாக இருந்தது, கணிப்பொறி தான். நிறைய தமிழ் சொல் சேகரித்தேன். இதற்காக தொல்காப்பியத்தில் இருந்து விதிகளை எடுத்து, ஜாவாவில் எழுதினேன். ஒரு தொழிலாளிக்கு, 'டூல் பாக்ஸ்' இருப்பது போல், எனக்கு பாடல் எழுத கணினி மூலம், 'டூல்பாக்ஸ்' ஒன்றை தயார்படுத்தினேன்.
ஏ.ஆர்.ரகுமான் இனிமையான பாடலை கேட்பார். இனிமையை எப்படி அறிவது... சொல்லின் பொருளை வைத்தா அல்லது ஒலியை வைத்தா? சர்க்கரை, நிலவேம்பு இதில் எது இனிமை? மொழியே தெரியாதவர்களுக்கு, சர்க்கரை என்ற சொல் இரைச்சலாக இருக்கும். ஆனால், நிலவேம்பு என்ற சொல் தான், காதுக்கு இனிமையாக இருக்கும். இந்த மாதிரி சொற்களை ஒலி
அமைப்பு மூலம் எப்படி எழுதுவது என்பதற்காக கருவிகளை உருவாக்கியுள்ளேன்.
பாடல் எழுத விரும்புவர்களுக்கு ஒரு பாடமாகவே இதை நான் கற்றுக் கொடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.