ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி அரசியல் பக்கம் பிஸியாக இருக்கிறார். மற்றொருபுறம் தனது பட வேலைகளிலும் துரிதமாக செயல்பட்டு வருகிறார்.
கமல், கைவசம் தற்போது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு மற்றும் இந்தியன் 2 என மூன்று படங்கள் உள்ளது. இதில் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு முடிந்து, சவுண்ட் மிக்ஸிங், எடிட்டிங் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதுவும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் படம் தயாராவதால், டிரைலரும் மூன்று மொழிகளில் ரெடியாகி உள்ளது. ரிலீஸ் தேதி ஓரிரு நாளில் வெளியாகும் என தெரிகிறது.