பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விசி.வடிவுடையான் இயக்கத்தில், சன்னி லியோன் நடித்து வரும் படம் வீரமாதேவி. முதன்முறையாக சன்னி லியோன் சரித்திர கதையில் நடிக்கும் இந்த படம் 5 மொழிகளில் தயாராகிறது. இப்படத்திற்காக குதிரையேற்றம் மட்டுமின்றி, சரித்திர கால சண்டை பயிற்சிகள் எடுத்து நடிக்கும் சன்னிலியோன், தமிழ்ப்பதிப்பில் நடிக்கும்போது தமிழை பேச பயிற்சி எடுத்து வருகிறார்.
இந்த வீரமாதேவி படத்தின் படப்பிடிப்பை மொத்தம் 85 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த ஆண்டு முழுக்க படப்பிடிப்பு நடைபெறுகிறதாம். காரணம், மாதத்தில் 7 நாட்கள் முதல் எட்டு நாட்கள் தான் இந்த படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்துள்ளாராம் சன்னி லியோன். அதன்காரணமாக, இப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அனைத்து டெக்னீஷியன்களையும் ஒரு ஆண்டு வேறு எந்த படத்திலும் பணியாற்றக்கூடாது என்று அக்ரிமென்ட் போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம்.