ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வித்யாபாலன் நடிப்பில் ஹிந்தியின் வெற்றி பெற்ற துமாரி சுலு படம் தமிழில் ரீ-மேக்காக இருப்பது பற்றியும், அதில் ஜோதிகா நடிக்க உள்ளது பற்றியும் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். அதன்படி தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழில் இப்படத்தை மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்குகிறார். பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார்.
'துமாரி சுலு' படத்தைத் தமிழில் இயக்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜோதிகாவுடன் 'மொழி' படத்தில் பணிபுரிந்திருக்கிறேன். அவருடன் மீண்டும் பணிபுரியக் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹிந்தியை போலவே தமிழிலும் துமாரி சுலு சிறப்பாக அமையும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார் ராதா மோகன்.
வித்யாபாலனின் தீவிர ரசிகை நான், அவரின் எல்லா படங்களும் எனக்கு பிடிக்கும். வித்யாபாலன் நடித்த வேடத்தை தமிழில் நான் செய்வது கவுரவமாக கருதுகிறேன் என்கிறார் ஜோதிகா.
''இந்த அருமையான படத்தின் தமிழ் உரிமை எங்களுக்குக் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இது எங்களுக்கு மறக்க முடியாத ஒரு படமாக அமையும் என்று நம்புகிறோம் என தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.