பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த சில வாரங்களாக சண்டக்கோழி-2 படத்தில் நடித்து வந்த நடிகர் விஷால், உடல்நலக்குறைவால் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்று முதலில் தகவல் கசிந்தது.
பின்னர் அந்த சிகிச்சை பலனளிக்கவில்லை என்பதால் அமெரிக்கா சென்று அங்குள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்கு பெற்று வருகிறார் என்றும் செயதிகள் வெளியாகின. இதற்கிடையில் கேரளாவில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் தனது உடல்நிலை குறித்து டுவீட் செய்துள்ளார் நடிகர் விஷால். 'என் உடல்நிலை குறித்தும், நான் ஒரு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்திகளில் உண்மையில்லை. எனக்கிருக்கும் ஒற்றைத்தலைவலி நோய்க்காகவே தற்போது சிகிச்சை பெற்று வருகிறேன்! ஒரு சில நாட்களில் அந்த சிகிச்சை முடிந்துவிடும். மார்ச் மாதம் முதல் வாரத்தில் சென்னை வந்து விடுவேன்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.