இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை ஸ்ரீதேவி துபாயில் மரணம் அடைந்த நிலையில் அவரது உடலை மும்பை கொண்டு வருவதில் தாமதம் நீடிக்கிறது. அந்நாட்டு சட்ட சிக்கல்கள் கடுமையாக இருப்பதால் உடலை கொண்டு வர காலதாமதமாகி இருக்கிறது.
இதனிடையே, ஸ்ரீதேவியின் உடல் எப்போது வரும் என அவரது வீட்டு வாசலில் தவம் கிடக்கின்றனர். மற்றொருபுறம் போனி கபூரின் சகோதரரும், நடிகருமான அனில் கபூர் வீட்டிற்கு திரையுலகினர் குவிந்த வண்ணம் உள்ளனர். அங்கு அனில் கபூர் மற்றும் அவரது குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர்.
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியும், அனில் கபூர் வீட்டில் தான் இருக்கிறார். அதனால், அவரையும் சந்தித்து ஏராளமான திரைப்பிரபலங்கள் ஆறுதல் கூறினர்.
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், ஸ்ருதிஹாசன், அக்ஷ்ராஹாசன் அவரது அம்மா சரிகாஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், ரசூல் பூக்குட்டி, கரண் ஜோகர், பராகான், பர்கான் அக்தர், ஜெனிலியா, கோவிந்தா, ஜெயப்பிரதா, அர்ஜூன் கபூர், மாதுரி தீட்சித் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் ஆறுதல் கூறினர்.