‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அண்ணனுடன் இயக்குநர், அப்பாவுடன் தயாரிப்பாளர், அம்மா, அப்பாவுடன் இசையமைப்பாளர் எனும் அளவிற்கு இருந்தது சமீபத்தில் சத்யம் திரையரங்கில் நடைபெற்ற "மீராவுடன் கிருஷ்ணா" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா!
ஏ.கிருஷ்ணா எனும் புதியவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருப்பதோடு கதை நாயகனாகவும் நடித்திருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், சசி, சமுத்திரகனி, சீனு ராமசாமி, மூர்த்தி, சாந்தகுமார் என ஏகப்பட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டு மீராவுடன் கிருஷ்ணா படத்தின் ஆடியோவை வெளியிட்டதும் பெற்றுக் கொண்டதும் ஒரு பக்கம் சிறப்பென்றால், மற்றொருபக்கம் தன் ஆசிரியர் அண்ணனை விழா மேடையில் ஏற்றி, இப்படத்தின் நாயகரும், இயக்குநருமான ஏ.கிருஷ்ணா வாழ்த்தி பேச வைத்ததும், ஓய்வு பெற்ற ஆசிரியரான தன் அப்பாவை மேடையேற்றி தயாரிப்பாளர் எம்.ஆர்.ஏ.விஜய் ஆசிர்வாதம் வாங்கியதும், பொம்மலாட்ட கலைஞரான தன் தந்தையுடன் தாயையும் மேடையேற்றி விழாவிற்கு வந்திருந்த இயக்குநர்கள் வி.ஐ.பி.கள் அத்துனை பேருக்கும் தன் சார்பில் தனியாக சால்வை அணிய செய்த அறிமுக இசையமைப்பாளர் கே.கே.செந்தில்குமாரும் விழாவை விதவிதமாக சிறப்பித்ததும் ஹைலைட்!
இப்பொழுது சொல்லுங்கள் மீராவுடன் கிருஷ்ணா? உறவுகளின் ஒத்துழைப்புடன் கிருஷ்ணாவா...?!