Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி மரணம் : தமிழ் பிரபலங்கள் இரங்கல்

25 பிப், 2018 - 07:29 IST
எழுத்தின் அளவு:
Tamil-Celebrities-condolene-to-Actress-Sridevi

நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஒட்டு மொத்த இந்திய சினிமாவையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏராளமான சினிமா பிரபலங்கள், சினிமா ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

வாழ்க்கை எத்தனை சிறியது என்பதை ஸ்ரீதேவியின் மரணம் உணர்த்துகிறது என நடிகை த்ரிஷா கூறியுள்ளார்.

மீள முடியாத அதிர்ச்சி, சிறந்த நடிகை மட்டுமல்ல, நல்ல மனிதர் என நடிகர் நாசர் கூறியுள்ளார்.

ஸ்ரீதேவி விட்டுச்சென்ற இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என நடிகை கவுதமி கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் : ஸ்ரீதேவியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்

நடிகை ராதா : நடிகை ஸ்ரீதேவியின் மறைவை என்னால் நம்ப முடியவில்லை.

நடிகை நக்மா : நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தை நம்ப முடியவில்லை. மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் : ஸ்ரீதேவியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

ஒய்.ஜி.மகேந்திரன் : ஸ்ரீதேவியின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

இயக்குனர் சிம்புதேவன் : புலி படத்தில் யவனராணி என்ற கதாப்பாத்திரத்தில் மிகத்திறமையாக நடித்தவர் ஸ்ரீதேவி. சினிமா துறையில் மிகுந்த அர்ப்பணிப்பும்; நேசிப்பும் உடையவர் ஸ்ரீதேவி.

நடிகை குஷ்பூ : ஸ்ரீதேவியின் குழந்தை சிரிப்பை தவறவிட்டுவிட்டோம். ஸ்ரீதேவியின் மறைவு குறித்து துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை.

நடிகை ரோஜா : நடிகைகளுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. புகழ்பெற்ற ஸ்ரீதேவி இனி இல்லை என்பதை யாராலும் ஜீரனிக்க முடியாத ஒன்று.

Advertisement
நடிகை ஸ்ரீதேவி காலமானார் : திரையுலகினர் அதிர்ச்சிநடிகை ஸ்ரீதேவி காலமானார் : ... ஸ்ரீதேவி நடித்த முக்கியமான தமிழ் திரைப்படங்கள் ஸ்ரீதேவி நடித்த முக்கியமான தமிழ் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film RK Nagar
    • ஆர்.கே.நகர்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : சனா அல்தாப்
    • இயக்குனர் :சரவண ராஜன்
    Tamil New Film Chennai 2 Bangkok
    Tamil New Film Traffic Ramasamy
    Tamil New Film Amman Thayee
    • அம்மன் தாயி
    • நடிகர் : அன்பு (புதியவர்)
    • நடிகை : ஜூலியானா
    • இயக்குனர் :சரண் (புதியவர்)

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in