ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பசுபதி, அஜ்மல் நடித்த டாக்சி 4777 படத்தை இயக்கிய ஆ.லட்சுமிகாந்தன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கும் படம் புறா பறக்குது. அவரே தயாரிக்கிறார். ஜெய் கிரிஷ் இசை அமைக்கிறார், கார்த்திகேயன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆருண், கவுதம், பப்லு, பிரியா, சுப்புலட்சுமி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படம் குறித்து ஆ.லட்சுமிகாந்தன் கூறியதாவது:
காதல் என்பது அமுதசுரபி மாதிரி. அதனால் தான் காதலை மையமாக ஆயிரக்கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஆயிரம் படங்கள் உருவாகவும் இருக்கின்றன. அந்த வரிசையில் ஒரு காதல் கதையைத்தான் கையில் எடுத்திருக்கிறேன். முதல்காட்சியில் ஒரு பேருந்து நிலையத்தில் ஒரு பெண்ணை பார்த்ததுமே இவள் தான் தனக்கானவள் என முடிவு செய்யும் இளைஞன், கடைசி காட்சியில் அவளிடம் ஐ லவ் யூ சொல்கிறான். இதுதான் படத்தின் கதை. இந்த காதலை எப்படி சொல்கிறான், காதலியின் மனதை எப்படி வெல்கிறான் என்பதைத்தான் திரைக்கதை.
ஆர்யா, ஷ்யாம், பூஜா, பிரசன்னா, பசுபதி, சிம்ரன், அஜ்மல், மீனாட்சி, அசோக், மைக்கேல் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள். அது எதற்காக என்பது சஸ்பென்ஸ். சென்னை, பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. என்றார்.