பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் கார்த்தி, முதன்முறையாக தன் அண்ணன் சூர்யாவின் தயாரிப்பில் நடிக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். பசங்க பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தில் கார்த்தியுடன் சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சத்யராஜ், மவுனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி உள்ளிட் பலர் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார்.
படத்தில் கார்த்தி மாதம் ரூ.1.5 லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் கெத்தான விவாசாயி வேடத்தில் நடித்துள்ளார். இளைஞர்கள் சிலர் இப்போது தாங்கள் செய்யும் IT வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். “கடைக்குட்டி சிங்கம்” படத்தின் ரிலீஸ்சுக்கு பின் இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்களாம். அந்தளவுக்கு கதைக்களம் அமைத்துள்ளார் பாண்டிராஜ்.
படத்தில் கார்த்தி 5 அக்காக்களுக்கு கடைசி தம்பியாக நடித்துள்ளதால் படத்திற்கு கடைக்குட்டி சிங்கம் என பெயர் வைத்திருக்கிறார்கள். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படபிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.