தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்தில், நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தை துவக்கி உள்ளார்.
கலாமின் வீட்டிற்கு சென்று அவரது சகோதரரிடம் ஆசி பெற்ற பிறகு, கலாமின் வீட்டில் காலை உணவு சாப்பிட்டார் கமல். அரை மணி நேர சந்திப்பிற்கு பின் கலாம் படித்த மண்டபம் ஒன்றியம் நடுநிலைப்பள்ளியை வெளியில் இருந்தே பார்த்து விட்டு, தான் தங்கியிருந்த தனியார் ஓட்டலுக்கு சென்றார்.
பிறகு கலாமின் இல்லத்திற்கு சென்றது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் கமல். அதில், பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.