ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சித்தார்த் மல்கோத்ரா, மனோஜ் பாஜ்பாய், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த படம் அய்யாரி. நீரஜ் பாண்டே இயக்கியிருந்தார். இப்படம் விமர்சனம் ரீதியாக பெரிய அளவில் பாராட்டு இல்லை. படத்தின் வசூலும் சுமாராகத் தான் உள்ளது. படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.3.36 கோடி, ரூ.4.04 கோடி, ரூ.4.30 கோடி என மொத்தமாக ரூ.11.70 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. சுமார் 1750 தியேட்டரில் வெளிவந்த அய்யாரி படத்தின் வசூல் குறைவு என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். வரும் வாரங்களில் படம் நல்ல வசூலை தராவிட்டால் நிச்சயம் தோல்வி படமாக அமையும் என்கிறார்கள்.