'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அனிமேஷன் படம் கோச்சடையான். ரஜினியின் மகள் செளந்தர்யா இயக்கினார். கோச்சடையான் படத்திற்காக ஆட் பீரோ என்ற நிறுவனத்திடம் ரஜினி மனைவி லதா, ரூ.10 கோடி கடன் வாங்கியதாகவும், ஆனால், 1.5 கோடி ரூபாய் மட்டும் திரும்ப செலுத்தி விட்டு, 8.5 கோடி ரூபாய் திருப்பி கொடுக்கவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த கோர்ட், வாங்கிய கடனை எப்போது திருப்பி கொடுப்பீர்கள். கடனை திருப்பி செலுத்தாதது ஏன் என்பது குறித்து லதா ரஜினியின் வக்கீலிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தொடர்ந்து நிலுவைத் தொகையான ரூ. 6.2 கோடியை 3 மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.