ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'ஆவ்' படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்தநிலையில் நித்யா மேனன் தற்போது மலையாளத்தில் நடித்துவரும் 'பிராண' என்கிற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்கியுள்ளார்.
இவருடைய டைரக்சனில் இரண்டு படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், இப்போது மூன்றாவது முறையாக வி.கே.பிரகாஷ் டைரக்சனில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட நான்கு மொழிகளில் இது தயாராகியுள்ளது.
தவிர நான்கு மொழிகளுக்குமான காட்சிகளை ஒரே சமயத்தில் மாற்றி மாற்றி எடுத்துள்ளார்கள் என்பதும் ஹைலைட்டான விஷயம். அந்தவகையில் நான்கு மொழிகளிலும் ஒரே கதாநாயகி ஒரே நேரத்தில் நடிக்கிறார் என்றால் அந்த சாதனைக்கு முதல் சொந்தக்காரர் நித்யா மேனன் தான்...