'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் ஷாக்சயம் படத்தைத் தொடர்ந்து ராம்சரண் - சமந்தா நடித்துள்ள ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் பூஜா ஹெக்டே. அதையடுத்து அவரைத்தேடி மகேஷ்பாபு - ஜூனியர் என்டிஆர் ஆகிய இரண்டு முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய படவாய்ப்புகள் தேடி வந்திருக்கிறது.
இதுவரை மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆருடன் நடிக்காத பூஜா ஹெக்டேவுக்கு இரண்டு படங்களையுமே விடுவதற்கு மனசில்லையாம். அதனால் காலம் தாழ்த்திக் கொண்டே வந்திருக்கிறார். சமீபத்தில் மகேஷ்பாபு படத்தில் கமிட்டானார் பூஜா ஹெக்டே.
ஜூனியர் என்டிஆர்., படத்தில் நடிப்பது பற்றி யோசித்து வந்தவர் இப்போது அந்த படத்தையும் கைப்பற்றி விட்டார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தாண்டு துவக்கத்திலேயே இரண்டு மெகா நடிகர்களின் பட வாய்ப்பு கிடைத்ததால் டபுள் கொண்டாட்டத்தில் இருக்கிறார் பூஜா ஹெக்டே.