தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை தயாரித்து, இயக்கிய கவுதம் வாசுதேவ் மேனன், அந்தப் படங்களை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். நிதி பிரச்னையால் படம் தாமதமாகி வருகிறது.
இந்தப்படங்களின் நிலைமை இப்படி இருக்க, அடுத்து இயக்கவிருக்கும் ஒன்றாக படத்தின் வேலைகளையும் துவங்கி விட்டார் கவுதம் வாசுதேவ் மேனன். மல்டிஸ்டார் படமான இப்படத்தில் சிம்புவுடன் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளை சேர்ந்த நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்திற்கான ஒரு கதாநாயகியாக அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடித்த த்ரிஷாவும் ஒன்றாகவில் ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இதற்கிடையில் பியா பாஜ்பாய், டோவினோ தாமஸ் நடிக்க, "அபியும் அனுவும்" என்ற படத்தையும் தயாரித்துள்ளார். இந்தப் படம் மார்ச் 9 அன்று ரிலீஸ் ஆகிறது. இந்த தகவலை டுவிட்டரில் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார்.