மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
நடிகர் கமல்ஹாசன், நாளை(பிப்., 21) முதல் தன் அரசியல் பயணத்தை துவங்குகிறார். தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து இந்த பயணத்தை துவங்குகிறார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இல்லத்தில் துவங்கி, மதுரையில் பிரம்மாண்ட கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி, மற்றும் சின்னங்களை அறிவிக்கிறார் கமல். இந்த கூட்டத்தில் பங்கேற்க பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த கூட்டம் தொடர்பாக கமல், தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "நாளை(பிப்., 21) துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.