சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
2018ம் ஆண்டிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் படங்கள் வெளியாவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் 8வது வாரமான பிப்ரவரி 23ம் தேதியும் சில படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அனைத்துப் படங்களுமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். இந்த ஆண்டு ஆரம்பமானதிலிருந்து இதுவரை வெளிவந்த படங்கள் எதுவுமே வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.
ஜனவரி மாதம் வெளிவந்த 13 படங்களில் ஒரு படம் கூட பெரிய வெற்றியைப் பெறாதது திரையுலகத்தினரை கவலை கொள்ளச் செய்தது. அது பிப்ரவரி மாதத்திலாவது சரியாகிவிடும் என நினைத்தார்கள். ஆனால், இந்த மாதத்திலும் அது தொடர்வதுதான் வேதனைக்குரிய விஷயம்.
இந்த பிப்ரவரி மாதத்தில் இதுவரை கடந்து போன மூன்று வெள்ளிக்கிழமைகளில் வெளிவந்த 14 படங்களில் ஒரு படம் கூட தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக நடைபெறவில்லை. அதிலும் அந்தப் படங்கள் வெளியான முதல் நாளிலேயே பல தியேட்டர்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே அரங்குகள் நிரம்பின.
பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான பிப்ரவரி 23ம் தேதி “6 அத்தியாயம், கேணி, காத்தாடி, பேய் இருக்கா இல்லையா, ஏண்டா தலையில எண்ண வெக்கல” ஆகிய படங்களும் ஒரு நாள் முன்னதாக பிப்ரவரி 22ம் தேதி 'கூட்டாளி' படமும் வெளிவர உள்ளது. பெரிய படங்களுடன் போட்டி இல்லாமல் வெளியாகும் இந்தப் படங்களாவது நல்ல படங்களாக அமைந்து நிறைவான வசூலைப் பெற்றால் தான் 2018ன் முதல் இரண்டு மாதங்கள் கொஞ்சமாக நிறைவாக அமையும். இல்லையென்றால் கோடை விடுமுறை வரை காத்திருக்க வேண்டியதுதான்.