ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஆர்யா, "அறிந்தும் அறியாமலும்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு உள்ளம் கேட்குமே, நான் கடவுள், மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவன், வேட்டை உள்பட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ஆர்யாவுக்கு கடந்த சில ஆண்டுகளாக படங்கள் சரியாக அமையவில்லை. புறம்போக்கு என்கிற பொதுவுடமை, விஎஸ்ஓபி, யட்சன், இஞ்சி இடுப்பழகி, பெங்களூரு நாட்கள், கடம்பன் போன்ற படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. தற்போது சந்தனத் தேவன், கஜினிகாந்த், படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் ஆர்யா. தமிழில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலர்ஸ் தமிழ் சேனலின் ஸ்டார் அட்ராக்ஷன் ஆர்யா தான். சேனலில் விளம்பர தூதரும் ஆர்யா தான் என்கிறார்கள்.
இந்த சேனலில் இன்று(பிப்., 19) தொடங்கும் "எங்க வீட்டு மாப்பிள்ளை" என்ற நிகழ்ச்சி, சுயம்வரம் பாணியில் ஆர்யாவுக்கு பெண்தேடும் நிகழ்ச்சி என்கிறார்கள். இதில் வெற்றி பெறுகிறவரை ஆர்யா திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறுகிறார்கள். கலர்ஸ் தமிழ் சேனல் இந்த நிகழ்ச்சியை தனது முத்தாய்ப்பான நட்சத்திர நிகழ்ச்சியாக கருதுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.