ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி உள்ள படம் பியாண்ட் தி க்ளவுட்ஸ். மும்பை குடிசையில் வாழும் மக்களின் வாழ்க்கை பற்றிய படம். மஜித் மஜிதி இயக்கும் முதல் வெளிநாட்டு படம். ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 20-ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, புதுமுக நடிகர் இஷான் கத்தார், மலையாள நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ள இப்படம் கலாச்சாரம் மற்றும் மொழிகளின் எல்லையைக் கடந்து, சக மனிதர்களை நேசிக்கும் சென்டிமென்ட்ஸ்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் குறித்து படத்தை தயாரித்துள்ள ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அதிகாரி சுஜய் குட்டி கூறுகையில், 'இப்படம் வெளியான பிறகு இந்தியாவில் மஜீத்திற்கு ரசிகர்கள் அதிகமாவார்கள் என உணர்கிறேன். மஜீத்தின் படத்தை வெளியிடுவதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைத்து நாடுகளிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை வெளியிடுவது மிகவும் சவாலாகவுள்ளது. இந்த முயற்சிக்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் கிடைக்கும் என நம்புகிறேன்.
பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் மனநிலையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய கனவுகளுடன் திரியும் 22 வயது அமிர், தவறான வழியில் செல்ல, அவனைக் காப்பாற்ற முற்படும் அவனது சகோதரி, இதற்காக போலீசால் கைது செய்யப்படும் கதாநாயகி தாரா. இதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதாக பியாண்ட் தி க்லௌட்ஸ் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இரு கதாபாத்திரத்தின் சாராம்சத்தை உணர்வுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார் மஜீத்' என்றார் .
படம் ஆங்கிலத்தில் தயாராகி இருந்தாலும் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.