ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அக்சய் குமார், ராதிகா அப்தே, சோனம் கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பேட்மேன் படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீசான முதல் வாரத்திலேயே இப்படம் வசூலை குவித்துள்ளது. முதல் வாரத்தில் இப்படம் ரூ.62.87 கோடிகளை வசூலித்துள்ளது.
ரிலீசான கடந்த வெள்ளிக்கிழமையன்று ரூ.10.26 கோடியையும், சனிக்கிழமையன்று ரூ.13.68 கோடியையும், ஞாயிற்றுக்கிழமையன்று ரூ.16.11 கோடியையும் வசூலித்துள்ளது. திங்கள் கிழமையன்று ரூ.5.87 கோடியையும், செவ்வாய் கிழமை ரூ.6.12 கோடியையும், புதன்கிழமை ரூ.7.05 கோடியையும், வியாழக்கிழமை ரூ.3.78 கோடியையும் பெற்றுள்ளது.
வார இறுதி நாட்களையும், விடுமுறை நாட்களையும் மனதில் கொண்டு இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதால் நல்ல வசூலை இப்படம் பெற்றுள்ளதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 2வது வாரத்தில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.