இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான 'அங்கமாலி டைரீஸ்' படத்தில் அறிமுகமாகி 'அப்பாணி ரவி' கேரக்டரில் கவனிக்க வைத்தவர் சரத்குமார். அதைத்தொடர்ந்து மோகன்லால் நடித்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல்' பாடல் அதிரிபுதிரி ஹிட்டாக அதில் நடித்த இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிகின்றன.
இதை தொடர்ந்து தமிழில் லிங்குசாமியின் டைரக்சனில் விஷால் நடிக்கும் 'சண்டக்கோழி-2' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார். மேலும் ராஜூ முருகன் கதையில் புதியவர் சரவணன் ராமச்சந்திரன் இயக்கும் படத்தில் கதாநாயகர்களில் ஒருவராக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் அப்பாணி சரத்.
இதை தொடர்ந்து இப்போது பம்பர் வாய்ப்பாக மணிரத்னம் இயக்கிவரும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அப்பாணி சரத்.