‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தேவி, குலேபகாவலி படங்களுக்குப்பிறகு யங் மங் சங், சார்லி சாப்ளின்-2, லட்சுமி, மெர்குரி என பல படங்களில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இதில் பீட்சா பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள மெர்குரி படம் சைலண்ட் திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. இந்த படம் முழுக்க ஒரு டயலாக்கூட பேசாமல் மோனோ ஆக்டிங் செய்துள்ளார் பிரபுதேவா.
இது தமிழ்ப்பட ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பதோடு, பிரபுதேவாவும், இதுவரை இந்த மாதிரியான ஒரு வேடத்தில் நடித்ததில்லை. அதனால் தனது கேரியரில் இந்த படம் தன்னை பர்பாமென்ஸ் ரீதியாக அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் என்று எதிர்பார்க்கிறார் பிரபுதேவா. மேலும், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை ஏப்ரல் 13-ந்தேதி தமிழ், தெலுங்கில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.