தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலியைத் தொடர்ந்து ரஜினி நடித்துள்ள படம் காலா. இந்த படம் ஏப்ரல் 27-ந்தேதி வெளியாகயிருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார். அதனால் தற்போது இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.
தெலுங்கிலும் ஏப்ரல் 27-ந்தேதி காலா ரிலீசாகும் என்று சொல்லப்பட்டாலும், இன்னும் காலா தெலுங்கு பதிப்பு விற்பனையாகவில்லையாம். இதற்கு காரணம் அதிக தொகையை தெலுங்கு பதிப்பிற்கு கேட்டு வருவதாக டோலிவுட்டில் செய்தி வெளியாகியிருக்கிறது.
அதோடு, எந்திரன் படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் எதுவுமே தெலுங்கில் வெற்றி பெறாததால், அதிக தொகையை கொடுத்து காலாவை வாங்க அங்குள்ள தயாரிப்பாளர்கள் தயங்கி நிற்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் அன்றைய தினம் மகேஷ் பாபுவின் பாரத் அனு நேனி மற்றும் அல்லு அர்ஜூனின் நா பேரு சூர்யா படங்கள் வெளியாக இருப்பதால் தியேட்டர் பிரச்னையும் இருக்கிறது. அதனால், திட்டமிட்டபடி ஏப்ரல் 27-ந்தேதி ரஜினியின் காலா தெலுங்கில் வெளியாகுமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.