Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீதிமன்ற நிபந்தனைகளுடன் வெளியானது நாகேஷ் திரையரங்கம்

16 பிப், 2018 - 13:06 IST
எழுத்தின் அளவு:
Nagesh-Thiraiyarangam-released-with-Court-condition

ஆரி, ஆஸ்னா ஜவேரி, சித்தாரா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் நாகேஷ் திரையரங்கம். டிரான்ஸ்இண்டியா நிறுவனத்தின் சார்பில் ராஜேந்திரா எம்.ராஜன் தயாரித்துள்ளார். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட அகடம் படத்தை இயக்கிய இஷாக் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் தலைப்பை எதிர்த்து பழம்பெறும் காமெடி நடிகர் நாகேஷின் மகனும், நடிகருமான ஆனந்த் பாபு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது தந்தை நடத்திய தியேட்டரின் பேரில் எங்கள் குடும்பத்தின் அனுமதியின்றி படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு நஷ்டஈடு தர வேண்டும், அதுவரை படத்தை தடை செய்ய வேண்டும் என்று தனது வழக்கு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதமன்றம், இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி நாகேஷ் திரையரங்கம் படத்தின், பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் இந்த படம் நாகேஷையோ, நாகேஷ் தியேட்டரையோ குறிப்பிடவில்லை என்ற வாசகம் இடம்பெற வேண்டும். படத்தை திரையிடும்போதும் மேற்கண்ட வாசகத்தையும் திரையிட வேண்டும், இயக்குனரும், தயாரிப்பாளரும் இணைந்து 20 லட்சம் ரூபாய் வழக்கு டெபாசிட் கட்ட வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்தது. அதன்படி நீதிமன்றம் குறிப்பிட்ட வாசகங்களுடன் பத்திரிகை விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. படம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

Advertisement
தமிழில் கால் பதித்த அதா சர்மாதமிழில் கால் பதித்த அதா சர்மா காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது : கமல் காவிரி தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    Tamil New Film Kalavani Mappillai
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in