'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
தயாரிப்பாளர் உதயநிதி நடிகராக உதயமாகும் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பருத்திவீரன் கார்த்தியும் அவரது நடிகர் அண்ணனும் கலந்து கொண்டனர்.
அடுத்த நாள் அந்த திரைப்படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. பிரஸ்மீட்டில் பேசிய உதயநிதியிடம் நிருபர் ஒருவர் நடிக்க வேண்டும் என்று உங்களுக்கு ஆர்வத்தை தூண்டிய நடிகர் யார் என கேட்க, பளிச்சென்று சொன்னார் "என் ரோல் மாடல் ஜீவா" என்று!! சிவா மனசுல சக்தி படத்தைப் பார்த்த பிறகே தனக்கும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்ததாக கூறினார். மேலும் இயக்குநர் எம்.ராஜேஷின் இயக்கத்தில் மேலும் பல படங்கள் நடிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
முதல் நாள் தன்னை வைத்து ஆடியோ ரிலீஸ் செய்த உதயநிதி அடுத்த நாளே அவரது இன்ஸ்பிரேஷன் ஜீவா என கூறியதால், தன்னுடன் நெருங்கிய நட்பில் இருந்து கொண்டே தன்னை காலைவாரி விட்டார் தயாரிப்பாளர் என கடும் காட்டத்தில் இருக்கிறாராம் அந்த அண்ணன் நடிகர்!! ஐயோ பாவம்....!!