பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடை பெற்றது. 400-க்கும் மேற்பட்ட இங்கிலாந்து நடிகர் - நடிகைகள் கலந்து கொண்டனர்.
அதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் கேரளாவில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவியாக நடிக்கும் நயன்தாரா சம்பந்தப்பட்ட பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அதோடு அவர்களுக்கான ஒரு செண்டிமென்ட் பாடல் காட்சியும் படமாக்கப்பட உள்ளதாம்.
இந்த சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்கு முதலில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகி விட்டார். அதனால் இப்போது பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.