மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
கனா காணும் காலங்கள் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் யுதன் பாலாஜி. காதல் சொல்ல வந்தேன், வசந்தகுமாரன் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ப்ரீத்தி என்பவரை திருமணம் செய்தார்.
கடந்த சில மாதங்களாக கணவன் - மனைவி இடையே இல்லற வாழ்வு சிறப்பாக இல்லாததால் இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டிருந்தனர். அதன்படி காதலர் தினத்தில் இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது.
"இந்த காதலர் தினத்தில் கடவுள் வித்தியாசமான பிளானை செயல்படுத்தியுள்ளார். வழக்கம்போல் எழுந்தேன், கோர்ட்டிற்கு சென்றேன், விவாகரத்து கிடைத்தது. ஆனாலும் மகிழ்ச்சி" என பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் பாலாஜி.