தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் தற்போது பாப்புலர் நடிகையாக மாறியுள்ள ஓவியா, தெலுங்கில் முதல் முறையாக நடித்துள்ள 'இதி நா லவ் ஸ்டோரி' படம் ஒருவழியாக வெளியாகிவிட்டது. காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியான இப்படத்திற்கு மிகச் சுமாரான வரவேற்பு மட்டுமே கிடைத்துள்ளது.
கன்னடத்தில் 2013ம் ஆண்டு வெளிவந்த ஹிட் படமான 'சிம்பிள் அகி ஒந்த் லவ் ஸ்டோரி' என்ற படத்தின் ரீமேக்தான் 'இதி நா லவ் ஸ்டோரி' படம். நீண்ட நாட்களாகவே தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தில் தருண் நாயகனாகவும், ஓவியா நாயகியாகவும் நடித்துள்ளனர். நேற்று வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களையும் குறைவான வசூலையும் சந்தித்து வருகிறது.
தெலுங்கில் ஒரு காலத்தில் பலராலும் ரசிக்கப்பட்ட இளம் நாயகனாக இருந்த தருண், இந்தப் படம் மூலம் மீண்டும் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்கலாம் என்று ஆசைப்பட்டிருந்தார். அவரது ஆசை நிராசையாகிவிட்டது. ஓவியாவின் தெலுங்கு அறிமுகமும் வெற்றிகரமாக அமையவில்லை.