ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். 'டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா' ஆகிய இரண்டு படங்களின் வெற்றி அவரையும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக மாற்றியது. அதன் பிறகு அவர் நடித்த நான்கு படங்களான 'பென்சில், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, ப்ரூஸ் லீ' ஆகிய நான்கு படங்களும் தொடர் தோல்வியை தழுவின.
இருந்தாலும், ஜி.வி.பிரகாஷ் தான் தற்போது அதிகப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நாயகன். “அடங்காதே, செம, 4ஜி, ஐங்கரன், குப்பத்து ராஜா, 100% காதல், சர்வம் தாள மயம்” ஆகிய படங்களில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படங்கள் அனைத்துமே இந்த வருடத்திற்குள் வந்துவிடும்.
2018-ம் ஆண்டின் முதல் வெளியீடாக ஜி.வி.பிரகாஷுக்கு நாளை வெளியாக உள்ள 'நாச்சியார்' வரப் போகிறது. பாலா இயக்கிய 'பரதேசி' படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் அவர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பையும் 'நாச்சியார்' படம் மூலம் பெற்றுவிட்டார். பாலா அவர் படங்களின் நாயகர்களை மாற்றுவது போலவே இந்தப் படத்திலும் ஜி.வி.பிரகாஷ் தலையில் சாயத்தைத் தடவி, டிரவுசர் அணிந்து நடிக்க வைத்திருக்கிறார்.
இயக்குனர் பாலாவே, ஜி.வி.பிரகாஷை நடிக்க அழைத்ததால் அதை பெருமையாகக் கருதுகிறார் ஜி.வி.பிரகாஷ். அப்படியே படத்திற்கு வெற்றியும் கிடைத்து, ஜி.வி.பிரகாஷ் நடிப்பிற்கு பாராட்டும் கிடைத்துவிட்டால், பிரகாஷை கையில் பிடிக்க முடியாது.