‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நேற்று ஒன்றரை கோடியாக இருந்தது இன்று ரெண்டு கோடியை தாண்டிவிட்டது.. ஆம் புருவத்தை உயர்த்தி இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்த, 'ஒரு ஆதார் லவ்' படத்தின் 'மாணிக்ய மலரே பூவி' பாடலை யூடியூப்பில் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை தான் ரெண்டு கோடியை தாண்டிவிட்டது.
இந்தப்பாடலில் பிரியாவின் புருவம் உயர்த்தும் சமிஞ்ஞைகளை பார்க்கும்போது இவ்வளவு கஷ்டமான விஷயத்தை படமாக்கும்போது பல டேக்குகள் வாங்கியிருப்பார் என்றுதான் தோன்றும்.. ஆனால் இதை ஒரே டேக்கில் ஓகே பண்ணிவிட்டாராம் பிரியா வாரியர்.
கூடவே அவருக்கு ஈடுகொடுத்து பதிலும் கண்ணசைவு காட்டிய ரோஷனும் ஒரே டேக்கில் இதை சாதித்தாராம். இவர்கள் இருவருக்கும் எப்படி புருவம் உயர்த்த வேண்டும் என பயிற்சி கொடுத்தவர் படத்தின் இயக்குனர் ஓமர் லுலு தானாம்..