மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
வேலைக்காரன் படத்தையடுத்து பொன்ராம் இயக்கத்தில் 'சீமராசா' படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்து 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார், இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷ்ன் படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் பிரீ புரடக்ஷ்ன்ஸ் பணிகள் கடந்த ஒரு வருடமாகவே நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது. சயின்ஸ் பிக்ஷ்ன் படம் என்பதால் இப்படத்தின் 75 சதவிகித காட்சிகளை க்ரீன்மேட்டில் படமாக்க இருக்கிறார்கள். அதற்காக தனியார் ஸ்டுடியோ ஒன்றில் க்ரீன்மேட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் டிவி ஒன்று வாங்கியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே இந்த படத்தின் சாட்லைட் உரிமை விற்கப்பட்டது திரையுலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.