இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். அதன் பிறகு பாலா, கஸ்தூரிமான், புதிய கீதை, ஆயுத எழுத்து, சண்டக்கோழி, திருமகன், பரட்டை என்கிற அழகு சுந்தரம் உள்பட பல படங்களில் நடித்தார். பாடம் ஒன்னு ஒரு வில்லாபம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு செட்டிலான மீரா ஜாஸ்மின் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
தற்போது அவர் மீண்டும் நடிக்க வருகிறார். இந்த முறை ஹீரோயினாக அல்ல குணசித்ர நடிகையாக வலம் வர இருக்கிறார். இதற்காக தமிழ், மலையாளத்தில் கதை கேட்டு வருகிறார். சண்டக்கோழி 2 படத்தில் அதன் தொடர்ச்சி கேரக்டரிலும் நடிக்கலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் மீரா ஜாஸ்மின் திருவனந்தபுரத்தில் ஒரு நகைக் கடைக்கு வந்திருந்தபோது எடுத்த படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவியிருக்கிறது. ஸ்லிம்மான தோற்றத்துடன் இருந்த மீரா ஜாஸ்மின், உடல் எடை கூடி ஆளே மாறியிருந்தார். இனி அவர் அக்கா, அண்ணி கேரக்டரில்தான் நடிக்க முடியும் என்பதை அந்த போட்டோக்களே உணர்த்துகிறது.