Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாரி 2' படத்தில் இணைந்த வரலட்சுமி

14 பிப், 2018 - 15:04 IST
எழுத்தின் அளவு:
Varalakshmi-joints-in-Maari-2

பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்க 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா இணையும் இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடிக்காத சிலர் நடிக்கிறார்கள்.

முதல் பாகத்தில் இடம் பெறாத புதிய கதாபாத்திரங்களும், புதிய நட்சத்திரங்களும் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளார்கள். நாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக நடிகை வரலட்சுமி நடிக்கிறார். இரண்டாவது நாயகனாக கிருஷ்ணா நடிக்கிறார். முதல் பாகத்தில் இடம் பெற்ற ரோபோ சங்கர், கல்லூரி வினோத் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். மலையாள நடிகரான டொவினோ தாமஸ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

'சண்டக் கோழி 2, கன்னிராசி, எச்சரிக்கை, மிஸ்டர் சந்திரமௌலி,' ஆகிய படங்களிலும் நடித்து வரும் வரலட்சுமியின் இந்த வருட பட எண்ணிக்கையில் 'மாரி 2' படமும் சேர்ந்துள்ளது. அவர் தனுஷுடன் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இப்படத்தை கோடை விடுமுறையில் வெளியிட வேண்டும் என்ற வேகத்துடன் படக்குழு செயல்பட்டு வருவதாகத் தகவல்.

Advertisement
பிளாஷ்பேக் : காலம் மறந்த வில்லன்பிளாஷ்பேக் : காலம் மறந்த வில்லன் சண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு அதிர்ச்சி சண்டைக்காட்சி லீக் : விஜய் படக்குழு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kanni Rasi
    • கன்னி ராசி
    • நடிகர் : விமல்
    • நடிகை : வரலெட்சுமி
    • இயக்குனர் :முத்துக்குமரன்.எஸ்
    Tamil New Film Kalavani Mappillai
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in