பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குனர் கௌதம் மேனன் அவருடைய யு டியூப் சேனலான ஒன்றாக என்டர்டெயின்மென்ட் மூலம் ஏற்கெனவே 'லட்சுமி, மா' என்ற இரண்டு குறும்படங்களை வெளியிட்டுள்ளார். 'லட்சுமி' குறும்படம் காமத்துக்காகவும், 'மா' குறும்படம் பாசத்துக்காகவும் பேசப்பட்டன. அந்த இரண்டு படங்களும் ரசிகர்களை எளிதில் சென்றடைந்தன.
குறும்படங்களுடன் தனி இசைப் பாடல்கள் அடங்கிய வீடியோக்களையும் அந்த யு டியூப் சேனல் மூலம் கௌதம் மேனன் வெளியிட ஆரம்பித்துள்ளார். கடந்த மாதம் 'கூவை' என்ற தனி இசைப் பாடல் ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு 'உலவிரவு' என்ற இரண்டாவது தனி இசைப் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தப் பாடலில் டிவி தொகுப்பாளர் திவ்யதர்ஷினி நாயகியாகவும், மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாகவும் நடித்துளளார்கள். கார்த்திக் இசையமைத்துள்ள இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார், கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தப் பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே 50000 பார்வைகளைக் கடந்துள்ளது.
வீடியோவை காண இந்த link... : https://youtu.be/dYVMN11-zek