Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்ச்சையில் சிக்கிய புருவநாயகி பிரியா வாரியர்

14 பிப், 2018 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Complaint-against-Priya-Warrier

எந்த அளவுக்கு பாராட்டும் புகழும் கிடைக்குமோ அந்த அளவுக்கு ஏதோ ஒரு வடிவத்தில் பிரச்னையும் தேடிவரும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் புருவ நாயகி பிரியா வாரியரும், அவர் நடித்துள்ள ஒரு ஆதார் லவ் படத்தின் மாணிக்ய மலாராய பூவி பாடலும். கடந்த சில தினங்களாக அதிகம் ரசிக்கப்பட்டு வரும் பெண்ணாக மாறியுள்ளார் பிரியா வாரியர்.

இந்தநிலையில், இந்தப்பாடல் வரும் ஒரு வரி தங்களது மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறி ஐதராபாத்தை சேர்ந்த முஸ்லீம் இளைஞர் அமைப்பினர் சிலர் புகார் அளித்துள்ளனர். இந்தப் பாடலில் நடித்த பிரியா வாரியர் மற்றும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஓமர் லுலு கூறும்போது, “எந்த மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் இந்தப்பாடல் உருவாகவில்லை. அனைவரும் ரசிக்கும்படியான ஒரு பாடலாகவே இது உருவாகியுள்ளது. அப்படியும் தேவையில்லாத சர்ச்சைகள், பிரச்சனைகள் வந்தால் இந்தப்பாடல் இடம்பெறாமலேயே படத்தை ரிலீஸ் செய்வோம்” என கூறியுள்ளார்.

Advertisement
கட்சியை பதிவு செய்ய தீவிரம் : கமல் ஆலோசனைகட்சியை பதிவு செய்ய தீவிரம் : கமல் ... கௌதம் மேனன் இயக்கத்தில் டிடி கௌதம் மேனன் இயக்கத்தில் டிடி


வாசகர் கருத்து (1)

Thinesh - Batticaloa town,இலங்கை
15 பிப், 2018 - 05:46 Report Abuse
Thinesh திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டியுள்ளார் பிரியா பிரகாஷ் இந்த பாடல் மூலம் தெரிகிறது இந்த படத்திலும் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும் என அறியக்கூடியதாக உள்ளது. வெளிவந்த இந்த திரைப்படத்தை பற்றிய காட்சிகளில் இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாக காட்சிகள் இடம்பெறவில்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sandakozhi 2
    • சண்டகோழி 2
    • நடிகர் : விஷால்
    • நடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி
    • இயக்குனர் :லிங்குசாமி
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Sandi Muni
    • சண்டி முனி
    • நடிகர் : நடராஜ் சுப்ரமணியம்
    • நடிகை : மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மில்கா செல்வகுமார்
    Tamil New Film VadaChennai
    • வடசென்னை
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : ஐஸ்வர்யா ராஜேஷ்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in