தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் |
கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியா முழுவதும் 'புருவ நாயகி' ப்ரியா வாரியரை பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. மலையாளத்தில் 'ஒரு ஆதார் லவ்' என்கிற படத்தில் இடம்பெறும் 'மாணிக்ய மலரே' என்கிற பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
ஜிமிக்கி கம்மல் பாடலை தொடர்ந்து வினீத் சீனிவாசன் - ஷான் ரகுமானின் அடுத்த அதிரடியாக உருவாகியுள்ள இந்தப்பாடலில் நடித்துள்ள ப்ரியா வாரியார் தனது புருவங்களை உயர்த்தி செய்யும் சமிஞ்ஞைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது.
கடந்த திங்கள் மாலை 5 மில்லியன் பார்வையார்களால் பார்க்கப்பட்டிருந்த இந்த பாடல் வீடியோ, இந்த செய்தி வெளியாகும் சமயத்தில் 15 மில்லியன் பார்வையாளர்களின் எண்ணிக்கையை நெருங்கி கொண்டு இருக்கிறது.