அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
காதலர் தினத்தை முன்னிட்டு பல படங்கள் தங்களது பர்ஸ்ட்லுக், சிங்கிள் வீடியோ, டீசர் என ஏதோ ஒன்றை இன்று வெளியிட்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க முண்டியடித்து வருகின்றன. அந்தவகையில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், காதல் படமாக உருவாகி வரும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் பர்ஸ்ட் லுக்கை இன்று காலை 9 மணிக்கு வெளியிட்டுள்ளனர்.
துல்கர் சல்மான், ரிது வர்மா ஜோடியாக நடித்துள்ள இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை காதல் குறியீடான இதய வடிவத்தில் வெளியிட்டுள்ளனர். இதற்காக துல்கர், ரிது இருவரின் விதவிதமான போஸ்களை ஒன்றிணைத்து இந்த வடிவத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் இதன் சிறப்பம்சமே..