தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
தமிழ்த் திரையுலகத்தில் இன்றைக்கு இயங்கிக் கொண்டிருக்கும் முக்கியமான இயக்குனர்களில் பாலா, அவருக்கென தனி இடத்தை உருவாக்கி வைத்துள்ளார். அவருடைய இயக்கத்தில் நடித்த விக்ரம், சூர்யா, ஆர்யா, அதர்வா ஆகியோருக்கு அதற்கப் பிறகுதான் தனி அடையாளமும் கிடைத்தது. இருந்தாலும் பாலா இயக்கத்தில் இதுவரை வெளிவந்த 7 படங்களில், அவர் இயக்கிய முதல் படமான 'சேது' படம் தவிர மற்ற படங்கள் எதுவும் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை பெறாத படங்களே. அவருடைய படங்களைப் பார்க்கும் ரசிகர்களும் அவரது படம் ஓடுமா, ஓடாதா என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. கதாபாத்திரங்களையும், கதையையும் எப்படி கையாள்கிறார் என்பதை ரசிப்பதற்காகவே படம் பார்க்கச் செல்கிறார்கள்.
7 படங்களுக்குப் பிறகு எட்டாவது படமாக பாலா இயக்கியுள்ள 'நாச்சியார்' படம் கதாநாயகியான ஜோதிகாவுக்கு முக்கியத்தும் உள்ள படம். படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவரை பாலா இயக்கத்தில் வெளிவந்த படங்கள் நாயகர்களுக்கே அதிக முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருந்தாலும் அவருடைய படங்களின் கதாநாயகிகளும் நடிப்பால் பேசப்பட்டவர்கள்தான்.
அவர்களை எல்லாம் விட 'நாச்சியார்' படத்தின் கதாநாயகியான ஜோதிகா அதிகம் பேசப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் பிப்ரவரி 16ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் பாலாவுக்கு கமர்ஷியல் ரீதியான வெற்றியைத் தருமா, ஜோதிகாவுக்கு பெயரைத் தருமா, ஜி.வி.பிரகாஷுக்கு திருப்புமுனையைத் தருமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி. இரண்டு நாட்களில் அதற்கான பதில் கிடைத்துவிடும்.