'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
தமிழில் டிவி. தொடர்களில் அறிமுகமான நிவேதா தாமஸ், அதன் பின் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, பாபநாசம் ஆகிய படங்களில் நடித்தார். இங்குள்ள முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வளரவில்லை என்றாலும் தெலுங்கில் நிவேதா முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக மாறிவிட்டார்.
அவர் நடித்து வெளிவந்த ஜென்டில்மேன், நின்னுகோரி, ஜெய் லகுசா ஆகிய படங்களில் அவருடைய நடிப்பை தெலுங்கு ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். அடுத்து அவர் நடிக்கும் புதிய படம் பற்றிய தகவலை விரைவில் வெளியிட உள்ளதாக நிவேதா தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஒரு மலைப் பாம்பை கழுத்தின் மீது போட்டு நிவேதா போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஒரு லட்சம் பேருக்கும் மேல் அதை லைக் செய்துள்ளனர். பொதுவாக நடிகைகள் என்றாலே நாய்க்குட்டிகளுடன்தான் போஸ் கொடுப்பார்கள். நிவேதா வித்தியாசமாக மலைப்பாம்புடன் போஸ் கொடுத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.