Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த கட்டத்திற்கு நகரும் ரஜினிகாந்த்

13 பிப், 2018 - 16:54 IST
எழுத்தின் அளவு:
Rajini-to-move-next-level

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் திரையுலகத்திலிருந்து புதிதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நுழைந்துள்ளார்கள். இருவருமே அவர்களது புதிய கட்சியைத் துவக்குவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டார்கள்.

ரஜினிகாந்த் கடந்த ஆண்டு இரு கட்டமாக அவரது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு நாளிலும் ரசிகர்கள் முன்னிலையில் பேசி அவர்களை உற்சாகப்படுத்தினார். கடைசி நாளில் ஆன்மீக அரசியல் என்ற புதிய அரசியலை உருவாக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

கமல்ஹாசன் ஹார்வர்டு பல்கலைக்கழம் வரை சென்று உரையாற்றி அவருடைய அரசியல் களம் வேறு என்பதைப் புரிய வைக்கும் முயற்சியில் இருக்கிறார். பிப்ரவரி 21ம் தேதி முதல் தன்னுடைய அரசியல் சுற்று பயணத்தை கமல்ஹாசன் ஆரம்பிக்க உள்ளார்.

ரஜினிகாந்தும் இப்போது அடுத்த கட்ட நகர்வுக்கு செல்ல உள்ளார். நாளை(பிப்., 14) முதல் மூன்று நாட்களுக்கு அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவர்களது கருத்துக்களைக் கேட்டறிந்த பிறகு ரஜினிகாந்த் அவருடைய அடுத்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (38) கருத்தைப் பதிவு செய்ய
'நாச்சியார்' உடன் போட்டி போடும் மற்ற படங்கள் ?'நாச்சியார்' உடன் போட்டி போடும் ... மலைப் பாம்புடன் போஸ் கொடுத்த நிவேதா தாமஸ் மலைப் பாம்புடன் போஸ் கொடுத்த நிவேதா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (38)

kabali tamilnadu - madurai,இந்தியா
14 பிப், 2018 - 19:53 Report Abuse
kabali tamilnadu ரஜினி 2019 cm
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
14 பிப், 2018 - 12:29 Report Abuse
Raman Ganesan கோபால் நீங்க எப்பவும் குக்கருக்கு ஓட்டு போடுங்க அது தான் உங்க அடையாளம் கருணா நீங்க முதல்ல தமிழ்நாட்டுக்கு வாங்க ஆஹா என்ன தமிழ் பாசம் தமிழன் இளிச்சவாயன் சரி தானே
Rate this:
vickram - madurai,இந்தியா
14 பிப், 2018 - 12:18 Report Abuse
vickram ivanunge cinemala than potti poturanunge nu patha ingayum vanthu potti poturange ivange vanthu natta kapatha.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
14 பிப், 2018 - 12:14 Report Abuse
Raman Ganesan இங்க ரஜினி பத்தி எந்த செய்தி வந்தாலும் உடனே விமர்சனம் பண்ணும் தமிழ் ஆர்வலர்கள் காமராஜருக்கு பிறகு நீங்க இதுவரைக்கும் ஓட்டு போட்ட ஒரு நல்ல தலைவன காட்டுங்க அப்புறம் பேசுங்க
Rate this:
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
14 பிப், 2018 - 11:33 Report Abuse
Rajavelu E. ரஜினி நல்லவராகவே இருந்தாலும் ஒரு மராட்டிய கன்னடர் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் தமிழரில் நல்லவரை தேர்வு செய்வோம்.
Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  Tamil New Film Ispet rajavum idhaya raniyum
  Tamil New Film Viswasam
  • விஸ்வாசம்
  • நடிகர் : அஜித் குமார்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :சிவா
  Tamil New Film Neeya 2
  • நீயா 2
  • நடிகர் : ஜெய்
  • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
  • இயக்குனர் :எல்.சுரேஷ்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in