டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினி நடிப்பில் ரஞ்சித் இயக்கிய முதல் படம் கபாலி. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். அவரது இசையில் உருவான நெருப்புடா பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. அதன்காரணமாக அதையடுத்து ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கியுள்ள காலா படத்திற்கும் சந்தோஷ் நாராயணனுக்கே இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதனால் இந்த காலா படத்தின் பாடலை கபாலியை விட மெகா ஹிட் பாடல்களாக்கிவிட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே கூடுதலாக மெனக்கெட்டு வருகிறார் சந்தோஷ் நாராயணன். குறிப்பாக, காலாவில் ரஜினியின் ஓப்பனிங் பாடலுக்கு சில மியூசிக் ட்ராக்குகளை பட்டியலிட்டு அதுகுறித்து ரசிகர்களிடம் கருத்து கேட்டார். அதையடுத்து பெருவாரியான ரசிகர்கள் விருப்பம் தெரிவித்த சவுண்ட் டிராக்கையே இப்போது காலாவில் ரஜினியின் அறிமுகப்பாடலுக்கு பயன்படுத்த இருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.