மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் |
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நாக செளரியா- சாய்பல்லவி நடித்துள்ள படம் கரு. தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்தபடம் தெலுங்கில் கணம் என்ற பெயரில் வெளியாகிறது. பிப்ரவரி 23-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை நேற்று மதியம் பார்வையிட்ட தணிக்கைக்குழுவினர் எந்த காட்சிகளையும் கத்தரிக்காமல் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.
இந்த படம் தற்போது சமூகத்தில் பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்னையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. அதன்காரணமாக இப்படத்தில் பல காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறாராம் சாய் பல்லவி.