மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
கடந்த 2௦௦9ல் வெளியான அருந்ததி படத்திற்கு இப்போதும் கூட தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் அவ்வளவு மவுசு இருக்கிறது. அனுஷ்கா நடித்த இந்தப்படம், அனுஷ்காவின் முழுத்திறமையை வெளிக்கொண்டு வந்ததுடன் அவரை முன்னணி நடிகையாக உச்சாணிக்கொம்பிலும் ஏற்றிவிட்டது. ஆனால் இந்தப்படத்தில் அருந்ததியாக நடிக்கும் வாய்ப்பு முதலில் நடிகை மம்தா மோகன்தாஸுக்குத்தான் போனதாம்.
இதுபற்றி சமீபத்தில் கூறியுள்ள அவர், “சினிமாவில் அப்போது எனக்கு அதீத ஆர்வம் இல்லை.. நான் நடிக்க வந்த முதல் நான்கு வருடங்களில் கொஞ்சம் குழப்பமான மனநிலையில் இருந்தேன். அதனால் ஏதோ படங்களில் நடித்து வந்தேனே தவிர, மிகப்பெரிய ஈடுபாடு காட்டவில்லை. அதனால் தான் 'அருந்ததி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தபோது கூட அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது” என மனம் திறந்து கூறியுள்ளார் மம்தா மோகன்தாஸ்.