'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர் ஆதில். எண்ட்லஸ் சம்மர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் நிர்யணக்கம், கப்பிரி துருத், அச்சயன்ஸ், ஹலோ துபாய்காரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவர் தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நளனும் நந்தினியும், சுட்டகதை படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சென்னை டூ சிங்கப்பூர் படத்தில் நடித்த அஞ்சு குரியன் நடிக்கிறார். இவர்களுடன் ஈரோடு மகேஷ், குரேஷி, நிம்மி இம்மானுவேல் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் விஜய்ராஜ் இயக்குகிறார். ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்கிறார், கிரிநந்த் இசை அமைக்கிறார். படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.