தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விமல் நடித்த கடைசி வெற்றிப் படம் மஞ்சப்பை. அதன்பிறகு அவர் நடித்த நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, காவல், அஞ்சல, மாப்பிள்ளை சிங்கம் படங்கள் அவருக்கு சரியாக அமையவில்லை. அதனால் ஒரு வெற்றி தேவை என்கிற கட்டாயத்தில் தானே சொந்தமாக தயாரித்து நடித்த படம் தான் மன்னர் வகையறா. பூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவான இந்தப் படம், இயக்குனருடன் கருத்து வேறுபாடு, கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து சமீபத்தில் வெளியானது. தனது சொந்த படம் காரணமாக பிற படங்களில் நடிக்காமல் இருந்தார் விமல். இதனால் கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ஒரு படம்கூட வெளிவரவில்லை.
தற்போது மன்னர் வகையறா வெளிவந்து ஓரளவுக்கு நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. 50 தியேட்டர்களில் 2வது வாரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. மன்னர் வகையறாவுக்கு பிறகு தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார் விமல். வெற்றிவேல் பட இயக்குனர் வசந்தமணியின் படம், ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அசோக்கின் படம், குறும்பட இயக்குனர் விஜய்யுடன் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கிறார். இதுதவிர சற்குணம் இயக்கத்தில் கே 2 (களவாணி 2ம் பாகம்) படத்திலும் நடிக்கிறார். வரலட்சுமியுடன் நடித்து முடித்துள்ள கன்னிராசி அடுத்து வெளிவர உள்ளது. ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகு விமல் மீண்டும் பிசியாகி உள்ளார் விமல்.