Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலில் எதிரிகளாகும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்

12 பிப், 2018 - 17:06 IST
எழுத்தின் அளவு:
Rajini---Kamal-opposite-in-Politics

தமிழ்நாடு அரசியல் களம் கடந்த ஒரு வருட காலமாகவே பல புதிய வினோதங்களை சந்தித்து வருகிறது. அவற்றில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் இறங்கியதும் ஒன்று. இருவருமே அவர்களது ஆரம்ப கட்ட அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்காலத்தில் அவர்களது அரசியல் பாதை எப்படி இருக்கப் போகிறது என்பது அவர்கள் நடந்து கொள்ளும் விஷயத்தில்தான் உள்ளது.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் கூட்டணி சேர்வார்களா என சமீப காலமாக கேள்வியும் எழுந்து வருகிறது. ஆனால், ரஜினியுடன் அரசியல் கூட்டணி சேர மாட்டேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடலில் பேசிய கமல்ஹாசன், “எனது அரசியல் கொள்கையின் நிறம் கருப்பு. ஆனால், ரஜினியின் முதல் அறிவிப்பு குறித்து யோசிக்க வேண்டியிருக்கிறது. ரஜினியின் கொள்கை காவியாக இருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை அவரது அரசியல் நிறம் காவியாக இருந்தால் அவருடன் கூட்டணி சேர வாய்ப்பில்லை,” என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் அவருடைய முதல் அரசியல் அறிவிப்பில் ஆன்மீக அரசியல் என்ற ஒரு விஷயத்தை அறிவித்தார். அதைத் தொடர்ந்து அது பற்றியும் சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கமல்ஹாசன் அது பற்றி பேசியிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்றாக ஆகியிருக்கிறது.

நிஜ வாழ்க்கையில் நண்பர்களாக இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

Advertisement
பாலசந்தர் அலுவலகங்கள் ஏலம்பாலசந்தர் அலுவலகங்கள் ஏலம் ஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் ஸ்கெட்ச் தெலுங்குப் பதிப்பில் 15 ...


வாசகர் கருத்து (12)

Pillai Rm - nagapattinam,இந்தியா
15 பிப், 2018 - 12:35 Report Abuse
Pillai Rm அப்பவே அவனை தனியா கடை போட்டு கல்லா கட்டிக்க சொன்னவன் இப்போ ஒத்து வருவானா
Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 பிப், 2018 - 09:56 Report Abuse
Venki இரண்டு பேருமே சொந்த குடும்பத்தை நிர்வகித்து கௌரவமாக வாழ வக்கில்லை முற்போக்கு சிந்தனையும் ஆன்மீகமும் பின்னி பிணைந்த எட்டு கோடி தமிழர்களுக்கு தலைமையா ?
Rate this:
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
13 பிப், 2018 - 09:48 Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN இன்னுமா தமிழ் நாட்டு மக்கள் இந்த கூத்தாடிகளை நம்பி கிட்டு இருக்காங்க. அப்படி இருந்தால், அது அவங்க தலை எழுத்தே தவிர வேறொன்றுமில்லை.
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
13 பிப், 2018 - 09:08 Report Abuse
vbs manian இருவரும் எதிர் எதிர் துருவங்கள் சேராமல் இருப்பது நல்லது. ஒரு கேள்வி. ஹார்வார்ட் பல்கலைக்கு போய் கமல் கொள்கை விளக்கம் செய்வது தான் உலக நாயகன் என்று காட்டி கொள்ளவா இது ஒரு ஸ்டண்ட் மாதிரி இருக்கிறது தமிழ் நாட்டிலேயே இவர் பேசுவது புரியவில்லை.
Rate this:
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
13 பிப், 2018 - 08:17 Report Abuse
Sathiamoorthy.V எம்.ஜி.ஆர் , கலைஞர் ஒரே கட்சியில் இருந்து வந்து சாதனை படைத்தார்கள். இவர்களும் அவர்களை போலவே திரைத்துறை மூலமாக வந்து விட முயற்சிக்கிறார்கள். நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தது சம்பாதிப்பது கூட அரசியல் பலம் இருப்பதால்தான். அதை தக்க வைத்துக்கொள்ள துடிக்கிறார்கள் . இரண்டு மூன்று முறை ஆசிரியர்கள் முதலமைச்சர்கள் ஆகி இருந்தால் ஆசிரியர்கள் நிறைய சம்பளம் வாங்கி இருப்பார்கள். விவசாயிகள் முதல் அமைச்சர்கள் ஆகியிருந்தால் அணை கட்டி இருப்பார்கள். உஷாரய்யா உஷாரு , உஷாரய்யா உஷாரு. பஸ்ஸில் வடிவேலு சொன்னது நினைவில் வருகிறது.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in