ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்த எவர்கிரீன் படங்களை வகைப்படுத்தினால் அதில் மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். அந்தப்படத்தில் மோகன்லால் தனது வேட்டியை கழட்டி எதிரிகளை அட்டாக் பண்ணும் காட்சியும், தனது லாரியில் இருந்து ஸ்டைலாக குதித்து மாஸ் காட்டும் காட்சியும் ரொம்பவே பிரசித்தம்.
அந்தப்படத்தை இயக்கிய பெருமைக்குரிய இயக்குனர் தான் பத்ரன். நேற்று தனது மகன் ஜெர்ரியின் திருமணத்தை தடபுடலாக நடத்திய இயக்குனர் பத்ரன், திருமண நிகழ்விற்கு மணமகன் ஜெர்ரியையும் மணமகள் சாராவையும் 'ஸ்படிகம்' பட பாணியில் லாரியில் அழைத்து வந்துள்ளார்.
'ஸ்படிகம்' என்கிற பெயர்கொண்ட அந்த லாரி பூக்களால் நன்கு அலங்கரிப்பட்டிருந்தது. அதிலிருந்து மோகன்லால் பாணியில் மணமகன் இறங்கியபோது உறவினர்கள், நண்பர்களின் ஆரவாரத்தால் விழா மண்டபமே அதிர்ந்ததாம்.